தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ ஜம்மு – காஷ்மீரில் வெடி பொருட்கள் பறிமுதல்

ஜம்மு – காஷ்மீரில் வெடி பொருட்கள் பறிமுதல்

ஜம்மு – காஷ்மீரில் வெடி பொருட்கள் பறிமுதல்


ADDED : மே 24, 2026 05:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 24, 2026 05:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாரமுல்லா: ஜம்மு – காஷ்மீரில், பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், ராக்கெட் குண்டுகள் உட்பட ஏராளமான வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜம்மு – காஷ்மீரின் பாரமுல்லா மாவட்ட எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்படி, ஜம்மு – காஷ்மீர் போலீசார், நம் ராணுவத்தின், 52 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் உள்ளிட்டோர், அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, நில்சார் கண்டி வனப்பகுதியில், பயங்கரவாதிகள் பயன்படுத்தும் பதுங்கு குழி இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். அங்கு சோதனை நடத்தியதில், ராணுவ தளவாடங்களுக்கு இணையான வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதில், பீரங்கி உள்ளிட்ட கவச வாகனங்களை தாக்கி அழிக்கக்கூடிய ராக்கெட் குண்டுகளின் வெடி மருந்துகளும் இருந்தன. தவிர, ஏராளமான வெடி பொருட்கள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மூலம், பெரிய அளவிலான சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் கூடுதலளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து, ஆயுதங்களை பதுக்கிய பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us