ADDED : ஆக 02, 2024 10:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு : கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம், நடப்பாண்டு 822 டன் மாம்பழங்களை ஏற்றுமதி செய்துள்ளது.
கெம்பே கவுடா சர்வ தேச விமான நிலைய தலைமைச் செயல் நிர்வாக அதிகாரி சத்யகி ரகுநாத் கூறியதாவது:
கடந்தாண்டு 685 டன் மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இம்முறை 822 டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது 20 சதவீதம் அதிகம்.
இங்கிருந்து, 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வெவ்வேறு விதமான மாம்பழங்கள், ஏற்றுமதி செய்யப்பட்டன.
கர்நாடகாவின் சாகுபடி பொருட்கள் பெங்களூரு விமான நிலையம் வழியாக, உலக மார்க்கெட்டை சென்றடைகின்றன. விமான நிலையத்தில், மேம்படுத்தப்பட்ட கோல்டு ஸ்டோரேஜ் உள்ளது. இங்கு சேகரித்து வைக்கப்படும் மாம்பழங்கள், எத்தனை நாட்களானாலும், கெடாமல் புத்தம் புதிதாக இருக்கும்.
இவ்வாறு அவர்கூறினார்.