ADDED : செப் 01, 2024 03:25 AM

பெங்களூரு : ''கொரோனா வேளையில் நடந்ததாக கூறப்படும் முறைகேடு குறித்து, விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஆணையத்தின் பதவிக் காலம், ஆறு மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது,'' என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கொரோனா நேரத்தில், நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி, அறிக்கை அளிக்க மாநில அரசு நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையில், விசாரணை ஆணையம் அமைத்துள்ளது.
தீவிரமாக விசாரிக்க வேண்டியுள்ளதால், பதவிக் காலத்தை மேலும் ஆறு மாதங்கள் நீட்டிக்கும்படி, விசாரணை ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதன்படி ஆறு மாதங்கள் பதவிக் காலத்தை அரசு நீட்டித்துள்ளது. ஆணையம் தற்போதைக்கு இடைக்கால அறிக்கை அளிக்கக் கூடும். ஆனால் இறுதி அறிக்கை அளிக்க அவகாசம் வேண்டும்.
ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதாகி, பல்லாரி சிறையில் அடைக்கப்பட்ட தர்ஷனை, முதலாவது அல்லது இரண்டாவது குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என, விசாரணை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இவர் பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தபோது, போன் கால், வீடியோ கால் செய்தது குறித்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணைக்கு சி.சி.பி., முக்கியஸ்தர் சந்திரகுப்பா நியமிக்கப்பட்டுள்ளார். அறிக்கைக்கு பின், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று மாலை விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்தது. இதன் பின், இது குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.