சுற்றுலா துறை பணம் மோசடி; சி.ஐ.டி.,யிடம் ஒப்படைப்பு
சுற்றுலா துறை பணம் மோசடி; சி.ஐ.டி.,யிடம் ஒப்படைப்பு
ADDED : ஆக 24, 2024 02:02 AM
பாகல்கோட் : சுற்றுலா துறை பணத்தை மோசடி செய்த வழக்கை, சி.ஐ.டி., விசாரணைக்கு அரசு ஒப்படைத்துள்ளது.
பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வருகை தரும் பயணியர் வசதிக்காக, ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதி உள்ளது.
இந்நிலையில் ஆன்லைனில் சுற்றுலா பயணியர் செலுத்தும் பணத்தை, சுற்றுலா துறை ஊழியர்கள் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், வங்கிகளில் போலிக் கணக்கு துவங்கி 2.47 கோடி ரூபாயை, ஊழியர்கள், தங்களது உறவினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி முறைகேடு செய்தது தெரிந்தது.
இந்த முறைகேடு குறித்து சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அரசுக்கு, கலால் அமைச்சர் திம்மாபூர் கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்று, விசாரணையை சி.ஐ.டி.,யிடம் அரசு ஒப்படைத்துள்ளது.
“வழக்கு தொடர்பான ஆவணங்களை விரைவில் சி.ஐ.டி.,யிடம் ஒப்படைப்போம்,” என, பாகல்கோட் மாவட்ட எஸ்.பி., அமர்நாத் ரெட்டி கூறியுள்ளார்.

