மோடி மீண்டும் பிரதமராவார் சிவகுமாருக்கு விவசாயி சவால்
மோடி மீண்டும் பிரதமராவார் சிவகுமாருக்கு விவசாயி சவால்
ADDED : ஏப் 19, 2024 06:13 AM
பாகல்கோட்: பாகல்கோட் லோக்சபா தொகுதிக்கு, இரண்டாம் கட்டத்தில் மே 7ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதியில் பா.ஜ., சார்பில் இன்னாள் எம்.பி., கத்தி கவுடரும், காங்கிரஸ் சார்பில் அமைச்சர் சிவானந்த் பாட்டீலின் மகள் சம்யுக்தாவும் போட்டியிடுகின்றனர்.
பா.ஜ.,வின் பாதுகாப்பு கோட்டையான பாகல்கோட்டில், 2004 முதல் தொடர்ந்து நான்கு முறை, கத்தி கவுடர் வெற்றி பெற்றுள்ளார். தற்போது ஐந்தாவது முறையாக களமிறங்கி உள்ளார். இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களும், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.சில நாட்களுக்கு முன், பா.ஜ., வேட்பாளர் பொது கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார். அதில் பேசிய விவசாயி லச்சப்பா ஹொஸ்மனி என்பவர், துணை முதல்வர் சிவகுமாருக்கு சவால் விடுத்துள்ளார்.
'நான், பிரதமர் நரேந்திர மோடியின், தீவிர விசுவாசி. மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். மோடி மூன்றாவது முறையாக பிரதமராவார். ஒருவேளை அவர் பிரதமர் ஆகா விட்டால், உங்கள் (சிவகுமார்) செருப்பை, என் தலை மீது வையுங்கள்.
'அவர் பிரதமர் ஆனால் நீங்கள் என்ன செய்வீர்கள். மோடியை பற்றி சிவகுமார் தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார். மொத்த நாடும் மோடியின் குடும்பம், எனவே நான் சிவகுமாருக்கு இந்த சவாலை விடுக்கிறேன்' என கூறியுள்ளார்.

