விமானப்படை விங்க் கமாண்டர் மீது பெண் அதிகாரி பாலியல் புகார்
விமானப்படை விங்க் கமாண்டர் மீது பெண் அதிகாரி பாலியல் புகார்
ADDED : செப் 10, 2024 07:35 PM

ஸ்ரீநகர்: பெண் விமானப்படை அதிகாரி ஒருவர் விங்க் கமாண்டர் மீது பாலியல் புகார் கூறியுள்ளது காஷ்மீரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர்.
காஷ்மீரின் ஸ்ரீநகரில் செயல்பட்டு வரும் விமானப்படை முகாமில் பணியாற்றி வரும் பெண் விமானப்படை அதிகாரி ஒருவர் பட்ஹாம் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில் தனது உயர் அதிகாரியான விங்க் கமாண்டர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்.
கடந்த 2023-ம் ஆண்டு டிச. 31-ம் தேதி புத்தாண்டு பரிசுடன் வந்து புத்தாண்டு விருந்தில் பங்கேற்க வருமாறு கட்டாயப்படுத்தினார். மறுத்தேன் உடன் அன்று இரவே எனது அறைக்கு வந்து என்னிடம் அத்துமீறி இயற்கை மாறாக உறவு கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினார். அவரிடமிருந்து தப்பித்து வெளியேறினேன். விங்க் கமாண்டரால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். இவ்வாறு அவர் புகாரில் கூறியுள்ளார்.
இவரது புகார் தொடர்பான தகவல் கர்னல் ரேஞ்ச் அதிகாரியின் கவனத்திற்கு சென்றது. அவரது உத்தரவின் பேரில் பட்ஹாம் போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து எப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

