பொம்மை யானையில் அமர்ந்து ஊர்வலமாக வேட்புமனு தாக்கல்
பொம்மை யானையில் அமர்ந்து ஊர்வலமாக வேட்புமனு தாக்கல்
ADDED : மார் 31, 2024 04:57 AM

ராம்நகர், : பெங்களூரு ரூரல் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ஒருவர், பொம்மை யானை மீது அமர்ந்தபடி வந்து, நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
தேர்தலில் வாக்காளர்களை கவர, வேட்பாளர்கள், பல வாகனங்கள் ஊர்வலமாக வருவது, மேள தாளத்துடன் செல்வது, மயிலாட்டம், ஒயிலாட்டம் என 'பல' வித்தியாசமான முயற்சிகள் செய்வர்.
அது போன்று, பெங்களூரு ரூரல் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சின்னப்பா, நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்ய, நகரின் எஸ்.பி., அலுவலகத்தில் ஊர்வலமாக புறப்பட்டனர். கட்சியின் சின்னமான யானை மீது சின்னப்பா அமர்ந்து சென்றார்.
ஆனால், அது உண்மையான யானை அல்ல; பொம்மை. அவருக்கு முன் கட்சி தொண்டர்கள் வாழ்க கோஷம் எழுப்பிய சென்றனர். 'டொள்ளு குனிதா, தமட்டே' கலைஞர்களும் ஊர்வலத்தில்பங்கேற்றனர்.
வேட்புமனுத் தாக்கலின்போது, மாநில தலைவர் மாரசந்திர முனியப்பா உட்பட தலைவர்கள் பங்கேற்றனர்.
வேட்புமனு தாக்கல் செய்ய, பொம்மை யானை மீது அமர்ந்தபடி பகுஜன் சமாஜ் கட்சிவேட்பாளர் சின்னப்பா சென்றார். இடம்: ராம்நகர்.

