தங்கவயல் குப்பை கிடங்கில் தீ 17 மணி நேரம் போராடி அணைப்பு
தங்கவயல் குப்பை கிடங்கில் தீ 17 மணி நேரம் போராடி அணைப்பு
ADDED : மார் 02, 2025 06:19 AM

தங்கவயல்: தங்கவயல் நகரின் 35 வார்டுகளில் சேரும் குப்பையை கொட்டப்படும் பாரண்டஹள்ளி குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட தீ நேற்று தான் அணைக்கப்பட்டது.
தங்கவயல் நகராட்சி பகுதியில் நாள்தோறும் 50 டன் குப்பை சேருவதாக கூறப்படுகிறது. இந்த குப்பை, பாரண்டஹள்ளி ஏரியின் அருகில் 9 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்த கிடங்கில் உரம் தயாரிப்புக்கு தனியாக பிரித்தெடுக்ப்படுகிறது.
இந்த குப்பை கிடங்கு அருகே உள்ள பாறை பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்குகுப்பையில் தீப்பிடித்து எரிந்தது.
இதை கவனித்த கிடங்கின் காவலர்கள், நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
நகராட்சி ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனடியாக தங்கவயலில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால், தீ கட்டுக்குள் வரவில்லை. இதனால், 20 கி.மீ., தொலைவில் உள்ள பங்கார் பேட்டையின் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து நேற்று காலை 11:00 மணி வரை தீயை அணைத்தனர். 17 மணி நேரத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது. தீ விபத்தால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
உரம் தயாரிப்பு நிலைய கருவிகளுக்கும் சேதம் ஏற்படவில்லை.
தகவல் அறிந்துநகராட்சி தலைவர் இந்திரா காந்தி, நகராட்சி அதிகாரிகள் மங்களகவுரி, சசிகுமார்,ஆணையர் பவன்குமார், பொறியாளர் மஞ்சுநாத்ஆகியோர் வந்து பார்வையிட்டனர்.
இரண்டு ஏக்கரில் உள்ள குப்பை எரிந்து கருகிசாம்பலானது.
தீ விபத்தால் பாரண்டஹள்ளி, அதன் சுற்றுப்புற பகுதிகள் புகை மண்டலமாக மாறியது.