பறிமுதல் கிடங்கில் தீ வாகனங்கள் நாசம் ரயில் முன் தற்கொலை புளூ லைன் பாதிப்பு
பறிமுதல் கிடங்கில் தீ வாகனங்கள் நாசம் ரயில் முன் தற்கொலை புளூ லைன் பாதிப்பு
ADDED : ஆக 09, 2024 02:14 AM
வஜிராபாத்: வடகிழக்கு டில்லியின் வஜிராபாத் பகுதியில் போலீசார் பறிமுதல் வாகனங்களை நிறுத்தும் வாகன கிடங்கில் நேற்று காலை தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து குறித்து தீயணைப்புப் படையினருக்கு அதிகாலை 5:15 மணியளவில் தகவல் வந்தது. வாகன கிடங்கிற்கு அருகில் புதரில் முதலில் தீப்பற்றியது. அங்கிருந்து வாகன கிடங்கிற்கு தீ பரவியது.
சம்பவ இடத்திற்கு 12 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. பல மணி நேரம் போராடி தீ கட்டுப்படுத்தப்பட்டது. ஏராளமான வாகனங்கள் தீ விபத்தில் சேதமடைந்தன. ஒரே வாரத்தில் இங்கு நிகழ்ந்த இரண்டாவது தீ விபத்து இது என்று கூறப்படுகிறது.
பொம்மை தொழிற்சாலை:
வடமேற்கு டில்லியின் பாரத் நகர் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் பொம்மைத் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இரவு தீ விபத்து ஏற்பட்டது. இரவு 7:45 மணியளவில் தீ விபத்து குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததாகவும், ஒன்பது தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று, இரண்டு மணி நேரம் போராடி தீயைகட்டுப்படுத்தின. மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.