ADDED : ஏப் 12, 2024 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி,:தெற்கு டில்லியின் கான்பூர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் உள்ள நான்கு மாடி வணிகக் கட்டடத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது.
தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் பைக் ஷோரூம், உடற்பயிற்சிக்கூடம் மற்றும் பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
திக்ரி காவல் நிலையத்திற்கு நேற்று காலை 11:20 மணியளவில் தீ விபத்து குறித்து தொலைபேசியில் புகார் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

