உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மே 25, 2024 02:10 AM
அ நிறம் | அளவு
புதுடில்லி, தலைநகர் டில்லியின் அலிபூரில் ஒரு மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அலிபூர் நரேலா சாலையில் அமைந்துள்ள விருந்து மண்டபத்தில் நேற்று மதியம் 1:50 மணிக்கு திடீரென தீப்பற்றியது. தகவல் அறிந்து, 13 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் வந்தனர். இரண்டு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மண்டபத்தில் இருந்த பல பொருட்கள் தீயில் எரிந்து சாம்பாலாகின. ஆனால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மின்கசிவு காரணமாக தீப்பற்றி இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. விசாரணை நடக்கிறது.
