இரண்டாவது நாளாக எரியும் தீ தீயணைப்பு வீரர்கள் போராட்டம்
இரண்டாவது நாளாக எரியும் தீ தீயணைப்பு வீரர்கள் போராட்டம்
ADDED : மார் 27, 2024 12:33 AM

நொய்டா,:புதுடில்லி அருகே நொய்டா குப்பைக் கிடங்கில் பற்றிய தீ, 18 மணி நேரத்துக்கும் மேலாக கொழுந்துவிட்டு எரிகிறது. காற்று பலமாக வீசுவதால், தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.
புதுடில்லி அருகே நொய்டா 32வது செக்டாரில் உள்ள தோட்டக்கலைத் துறை குப்பைக் கிடங்கில் நேற்று முன் தினம் மாலை தீப்பற்றியது.
தகவல் அறிந்து நொய்டா தலைமை தீயணைப்பு அதிகாரி பிரதீப் குமார் சவுபே தலைமையில், 15 வண்டிகளில் வீரர்கள் வந்தனர்.
காய்ந்த சருகுகள் மலைபோல் குவிந்து இருப்பதாலும், காற்று பலமாக வீசுவதாலும் தீ கொழுந்து விட்டு எரிகிறது.
நேற்று காலை வரை தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.
சமூக விரோதிகள் குப்பைக்கு தீ வைத்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாததிலும் இதே குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. அதை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர ஆறு நாட்கள் ஆனது.
இந்தக் குப்பைக் கிடங்குக்கு அருகே ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கடைகள் அமைந்துள்ளன.

