ADDED : மே 04, 2024 09:02 PM
பக்வாரா:பஞ்சாப் மாநிலத்தில், கிராமத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் துப்பாக்கியால் சுடப்பட்ட நொய்டா வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பஞ்சாபின் லா கேட் மஹேரு கிராமத்தில் நேற்று இரு கோஷ்டியினர் இடையே மோதல் வெடித்தது. ஒருவருக்கு ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். இதில் சிலர் துப்பாக்கியால் எதிர் கோஷ்டியினரை சுட்டனர்.
இதில், கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த சத்யம் என்ற வாலிபர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து பலத்த காயம் அடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. லேசான காயம் அடைந்த யாஷ் ரதி மற்றும் ஆதர்ஷ் திரிபாதி ஆகிய இருவரும் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், ஏழு பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மஹேரு கிராமத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.