இரவிகுளம் பூங்காவில் பூத்த 'பிஷ் பாய்சன் புஷ்' பூக்கள்
இரவிகுளம் பூங்காவில் பூத்த 'பிஷ் பாய்சன் புஷ்' பூக்கள்
ADDED : மார் 11, 2025 12:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: இரவிகுளம் தேசிய பூங்காவில் அரிய வகை 'பிஷ் பாய்சன் புஷ்' பூக்கள் பூத்தன.
மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள வனங்களின் உள்காடுகளில் காணப்படும் இந்த வகை பூக்கள் 'ஜெனேடியா குளுக்கோ' எனும் அறிவியல் பெயர் கொண்டவை. இந்த பூக்கள் நச்சு தன்மை கொண்டதால் மலைவாழ் மக்கள் ஆறு உள்பட நீர் நிலைகளில் மீன் பிடிக்க பயன்படுத்தினர்.
இந்த பூக்களை நீர் நிலைகளில் தூவினால் மீன்கள் மயங்கி விடும். செடிகள் எளிதில் தீப்பற்றும் தன்மை கொண்டவை என்பதால் மலைவாழ் மக்கள் விறகுக்கு பயன்படுத்தினர். இலைகள் நீர் சத்து கொண்டவை என்பதால், அதனை காயங்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தினர்.
இந்த அரிய வகை பூக்கள் ஜனவரி முதல் மார்ச் வரை பூக்கும். தற்போது இரவிகுளம் தேசிய பூங்காவில் வனங்களில் பூத்துள்ளன.