ADDED : ஆக 02, 2024 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரித்பூர்: மெட்ரோ ரயில்களில் பிக்பாக்கெட் அடித்து வந்த ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆசாத்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து லஜ்பத் நகருக்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்தபோது, தன்னிடம் இருந்த 1.5 லட்சம் ரூபாயை சில பெண்கள் திருடிச் சென்றதாக நேரு பிளேஸ் மெட்ரோ போலீசில் ஒருவர் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, சந்தேகத்திற்கு இடமானவர்களை அடையாளம் கண்டனர்.
அந்த வகையில் பரித்பூர் பகுதியில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனந்த் பர்பத் பகுதியில் வசிக்கும் லட்சுமி, 38, சவிதா, 40, கவிதா, 47, கவுசல்யா, 50, மீனா, 40, ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.5 லட்ச ரூபாய் மீட்கப்பட்டது.