வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமித்ஷா ஆலோசனை
வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமித்ஷா ஆலோசனை
ADDED : ஜூன் 23, 2024 01:21 PM

புதுடில்லி: பருவமழையின் போது நாட்டின் பல்வேறு பகுதிகளை பாதிக்கும் வெள்ளங்களைச் சமாளிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து, டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஒவ்வொரு ஆண்டும், பீஹார், அசாம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில், பருவமழை காரணமாக பல்வேறு ஆறுகளின் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. உத்தரகண்ட், ஹிமாச்சலப் பிரதேசம், சிக்கிமில் நிலச்சரிவு ஏற்பட்டு, மக்கள் பாதிக்கப்படுகின்றனர். தற்போது அசாமில் கனமழை கொட்டி தீர்த்து வருவதால், 19 மாவட்டங்களில் உள்ள 3.90 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம், நிலச்சரிவு மற்றும் புயல் ஆகியவற்றில் சிக்கி இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். பருவமழையின் போது நாட்டின் பல்வேறு பகுதிகளை பாதிக்கும் வெள்ளங்களைச் சமாளிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து இன்று (ஜூன் 23) அமித்ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. டில்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், அதிகாரிகளிடம் அமித்ஷா தற்போது வரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.