காதில் பூ சுற்றுகிறது காங்., மீது பா.ஜ., பாய்ச்சல்
காதில் பூ சுற்றுகிறது காங்., மீது பா.ஜ., பாய்ச்சல்
ADDED : மே 27, 2024 07:31 AM
பெங்களூரு: 'லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் தோல்வி அடைவது உறுதி. மக்களின் காதுகளில் அரசு பூ சுற்றுகிறது,' என பா.ஜ., குற்றம் சாட்டி உள்ளது.
இது தொடர்பாக, 'எக்ஸ்' எனும் சமூக வலைதளத்தில், நேற்று பா.ஜ., கூறியதாவது:
கர்நாடக மாநில மக்களுக்கு, 10 கிலோ அரிசி வழங்குவதாக கூறி, காதில் பூ சுற்றிய முதல்வர் சித்தராமையா, இப்போது மக்களின் தலையில் பூந்தொட்டியே வைத்துள்ளார். 10 கிலோ அரிசியும் இல்லை, அரிசிக்கு பதிலாக பணமும் இல்லை. மூன்று மாதங்களாக அரிசிக்கான பணம் வரவில்லை. பணம் தருவீர்களா, இல்லையா என்பதை கூறுங்கள்.
கர்நாடகாவில் சட்டம் - ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. இதை கண்டித்து பா.ஜ., போராட்டம் நடத்தும். கர்நாடகாவின் பொருளாதாரத்தை பாழாக்கி, பாதுகாப்பு இல்லாத மாநிலமாக்கியவர் சித்து. இதுதான் முதல்வர் சித்தராமையாவின் ஓராண்டு சாதனை.
வளர்ச்சி பணிகளை காங்கிரஸ் அலட்சியம் செய்துள்ளது. கர்நாடகாவின் சட்டம் - ஒழுங்கு இந்த அளவுக்கு பாழானது, இதுவே முதன் முறை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

