ADDED : மே 21, 2024 06:13 AM
சிக்கபல்லாபூர்: சிக்கபல்லாபூரில் வசிக்கும் 15 வயதான, பள்ளி மாணவியர் இருவர், பரேசந்திரா கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்குச் சென்றனர்.
நிகழ்ச்சி முடிந்த பின், நேற்று மதியம் வீட்டுக்குச் செல்ல, நெடுஞ்சாலையில பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக, பைக்கில் சென்ற ஸ்ரீகாந்த், 28, என்பவர் மாணவியரை பார்த்து, பைக்கை நிறுத்தினார்.
சிக்கபல்லாபூரில் 'டிராப்' செய்வதாகக் கூறி, இருவரையும் பைக்கில் ஏற்றிக்கொண்டார். ஆனால், வழியை மாற்றி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு மாணவியரை பலாத்காரம் செய்ய முயற்சித்தார்.
மாணவியர் எப்படியோ தப்பி வந்து, '112'ல் போலீசாரை தொடர்பு கொண்டு, நடந்ததை கூறினர்; தாங்கள் இருந்த லொகேஷனை அனுப்பினர்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த போலீசார், மாணவியரை காப்பாற்றினர். ஸ்ரீகாந்தையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

