தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ கர்நாடகாவில் போட்டியிட்ட வெளி மாநிலத்தினர்

கர்நாடகாவில் போட்டியிட்ட வெளி மாநிலத்தினர்

கர்நாடகாவில் போட்டியிட்ட வெளி மாநிலத்தினர்


ADDED : ஏப் 30, 2024 07:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 30, 2024 07:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரசியல் எதிர்காலத்துக்காக, வெளி மாநிலத்தவர் கர்நாடகாவிலும், கர்நாடக தலைவர்கள் வெளி மாநிலத்திலும் போட்டியிட்ட வரலாறு உள்ளது.

ஒவ்வொரு முறை ராஜ்யசபா தேர்தலிலும், தேசிய கட்சிகள் வெளி மாநிலங்களின் தலைவர்களுக்கு முக்கியத்துவம் தருகின்றன. கன்னடர்களுக்கு அநியாயம் செய்வதாக குற்றச்சாட்டு நீண்ட காலமாக உள்ளது. ஆனால், லோக்சபா தேர்தலிலும் இதுபோன்று நடந்துள்ளது.

இடைத்தேர்தல்


வெளி மாநிலத்தவர் கர்நாடகாவுக்கு வந்து, தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். அதே போன்று கன்னடர்கள், வெளி மாநிலங்களுக்கு சென்று போட்டியிட்டு வெற்றி, தோல்வி இரண்டையும் சந்தித்துள்ளனர். வெளி மாநிலத்தவர்கள், பெரும்பாலும் இடைத்தேர்தல்களில் அதிகம் போட்டியிட்டுள்ளனர்.

துமகூரு லோக்சபா தொகுதியில் 1962ல், அன்றைய எம்.பி.,யாக இருந்த கிருஷ்ணப்பா, ராஜினாமா செய்து உத்தரபிரதேசத்தின் அஜித் பிரசாத் ஜெயின் போட்டியிட வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார். இதில் அவர் வெற்றி பெற்றார்.

சிக்கமகளூரு லோக்சபா தொகுதியில், 1978ல் நடந்த இடைத்தேர்தலில் முன்னாள் பிரதமர் இந்திரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவசர சூழ்நிலையை திணித்ததால், ரேபரேலியில் தோற்றார். இவருக்காக, சந்திரேகவுடா தன் எம்.பி., பதவியை தியாகம் செய்தார்.

கேரளாவின் ஸ்டீபன், 1978ல் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். இந்திரா அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தவர். ஆனால் 1980 தேர்தலில் தோல்வியை சந்தித்தார். இவரை லோக்சபாவுக்கு அழைத்து வர முடிவு செய்த இந்திரா, அன்றைய குல்பர்கா எம்.பி.,யாக இருந்த தரம்சிங்கை ராஜினாமா செய்ய வைத்தார். இங்கு நடந்த இடைத்தேர்தலில் ஸ்டீபனை களமிறக்கி வெற்றி பெற வைத்தார்.

சோனியா, சுஷ்மா


இந்திராவின் மருமகள் சோனியா, 1999ல் பல்லாரி லோக்சபா தொகுதியில் காங்., சார்பில் களமிறங்கி வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்டு தோற்ற சுஷ்மா சுவராஜும் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர் தான்.

கர்நாடகாவைச் சேர்ந்த பல தலைவர்கள், வெளிமாநிலத்தில் போட்டியிட்டு, லோக்சபாவில் நுழைந்துள்ளனர். இதுபோன்று வெற்றி பெற்ற முதல் கன்னடர் ஹன்டே விஷ்ணு காமத். இவர் ஐ.சி.எஸ்., அதிகாரியாகவும் இருந்தார். இவர் மத்திய பிரதேசத்தின் ஹோஷாங்பாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கர்நாடகாவை சேர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், மும்பை தெற்கு, பீஹாரின் முசாபர்பூரில் வெற்றி பெற்றார். அதே நேரம், ஜார்ஜ் மற்றும் ஜெகந்நாத்ராவ் ஜோஷி, கர்நாடகாவில் போட்டியிட்டு தோற்றனர். இதுபோன்று பல உதாரணங்கள் உள்ளன.- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us