தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ முன்னாள் எம்.பி., நடிகை ரம்யா இன்றாவது ஓட்டு போடுவாரா?

முன்னாள் எம்.பி., நடிகை ரம்யா இன்றாவது ஓட்டு போடுவாரா?

முன்னாள் எம்.பி., நடிகை ரம்யா இன்றாவது ஓட்டு போடுவாரா?


ADDED : ஏப் 25, 2024 11:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2024 11:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாண்டியா: முன்னாள் எம்.பி.,யும், நடிகையுமான ரம்யா, 2013 லோக்சபா இடைத்தேர்தலில் போட்டியிட்ட போது, ஓட்டு போட்டவர், அதன்பின் எந்த தேர்தலிலும் ஓட்டு போடவில்லை.

மாண்டியாவின் வித்யா நகரில் வசித்து வருபவர் நடிகை ரம்யா. 2013ல் நடந்த மாண்டியா லோக்சபா இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, காங்கிரஸ் எம்.பி.,யானார். அதன்பின், 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு, ம.ஜ.த.,வின் புட்டராஜுவிடம் தோல்வி அடைந்தார்.

அதன்பின், ஊடகங்கள் கண்களில் தென்படாமல், காங்கிரஸ் தேசிய ஊடக பிரிவில் பணியாற்றி வந்தார். கர்நாடகாவில் 2018, 2023ல் சட்டசபை தேர்தல்; 2019ல் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளன. இவற்றில் எந்த தேர்தலிலும் ரம்யா ஓட்டுப்பதிவு செய்யவில்லை.

கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மாண்டியாவில் ரம்யா பிரசாரம் செய்தார். ஆனபோதும் ஓட்டு போடவில்லை.

தற்போதைய லோக்சபா தேர்தலில் ரம்யா பிரசாரம் செய்தால், பெரும் வரவேற்பு இருக்கும் என காங்கிரசார் நம்பினர். அதற்காகவே, காங்கிரஸ் நட்சத்திர பிரசாரகர்கள் பட்டியலில் ரம்யா பெயர் சேர்க்கப்பட்டது. ஆனால் அவர் பிரசாரத்துக்கு வரவில்லை.

முன்னாள் எம்.பி.,யாக இருந்தும்; பிரசாரத்துக்கு வராமல் இருந்தாலும் கூட, ஓட்டு போட வேண்டியது அவரின் கடமை என்று தொகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இன்று, மாண்டியா உட்பட 14 லோக்சபா தொகுதிகளுக்கு ஓட்டு பதிவு நடக்கிறது. இம்முறையாவது அவர் ஓட்டு போடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us