ADDED : ஏப் 27, 2024 11:08 PM

மாண்டியா: நடிகையும், முன்னாள் எம்.பி.,யுமான ரம்யா, இம்முறையும் ஓட்டுப் போடாதது, சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.
மாண்டியா லோக்சபா இடைத்தேர்லில் 2013ல் போட்டியிட்டு ரம்யா வெற்றி பெற்றார். ஆனால் 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில் தோற்றார். அதன்பின் ஓராண்டு வரை, அவர் மாண்டியாவில் கால் வைக்கவில்லை. அபூர்வமாக தலை காண்பித்தார். காங்கிரஸ் தேசிய ஊடக பொறுப்பாளரான பின், மாண்டியாவுக்கு வருவதை நிறுத்தினார்.
கடந்த சட்டசபை தேர்தலின்போது, பிரசாரத்துக்கு வந்து சில வரிகளில் உரையாற்றிவிட்டுச் சென்றார்; ஓட்டுப் போடவும் வரவில்லை. இம்முறை லோக்சபா தேர்தலின் முதற்கட்ட ஓட்டுப்பதிவு நேற்று முன் தினம் நடந்தது. மாண்டியா தொகுதிக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது. ஆனால் ரம்யா ஓட்டுப் போட வரவில்லை.
முன்னாள் எம்.பி.,யான இவர், மற்றவருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். ஓட்டுப் போடும்படி மக்களை ஊக்கப்படுத்துவது, அவரது கடமை. ஆனால் இவரே ஓட்டுப் போடுவதில் அக்கறை இல்லாதது, சர்ச்சைக்கு காரணமானது.

