மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார் ; அரசியல் தலைவர்கள் இரங்கல்
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார் ; அரசியல் தலைவர்கள் இரங்கல்
ADDED : ஆக 08, 2024 11:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொல்கத்தா: மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 80.
2000 முதல் 2011ம் ஆண்டு வரையில் மேற்கு வங்கத்தின் முதல்வராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராகவும் இருந்தவர் புத்ததேவ் பட்டாச்சார்யா. தெற்கு கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த இவர், அண்மை காலமாக சுவாசப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார்.
தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்த புத்ததேவ் பட்டாச்சார்யா, இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.