ADDED : மார் 06, 2025 10:50 PM
ஜோதி நகர்: வடகிழக்கு பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
வடகிழக்கு டில்லியின் சக்தி கார்டன் பகுதியில் 3ம் தேதி இரவு 9:00 மணி அளவில் இரண்டு குழுக்களுக்கு துப்பாக்கிச்சண்டை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கு துப்பாக்கிக் குண்டு பாய்ந்து அங்கித் என்ற மோன்டி, 24, உட்பட ஐந்து பேர் காயமடைந்து கிடந்தனர். அவர்களை மீட்ட போலீசார், அவர்களை குரு தேக் பகதுார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆகாஷ் என்ற மாதா, 21, அபிஷேக் என்ற ஆகாஷ் சிகாரா, 30, வாசு, 22, ஆகிய மூவர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
ஒரு நாட்டுத் துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.