கர்நாடகாவில் நான்கு நாட்கள் மழை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
கர்நாடகாவில் நான்கு நாட்கள் மழை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
ADDED : மே 11, 2024 06:48 AM
பெங்களூரு: கர்நாடகாவின் பல மாவட்டங்களில் இன்று முதல் நான்கு நாட்கள் வரை, கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
இதுகுறித்து, வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:
கர்நாடகாவில் நாளை (இன்று) முதல் வரும் 14ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது. 11ல் உத்தரகன்னடா, ஷிவமொகா, உடுப்பி, சிக்கமகளூரு, தட்சிண கன்னடா, குடகு மாவட்டங்கள்; 12ல் பீதர், கலபுரகி, பெலகாவி, உத்தரகன்னடா, ஷிவமொகா, உடுப்பி, சிக்கமகளூரு, தட்சிண கன்னடா, குடகு; 13ல் பீதர், கலபுரகி, பெலகாவி, உத்தரகன்னடா, ஷிவமொகா, உடுப்பி, சிக்கமகளூரு, தட்சிண கன்னடா, குடகு, ராம்நகர், மைசூரு, மாண்டியா; 14ல் விஜயபுரா மாவட்டத்தில் மழை பெய்யும்.
கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களில், 'எல்லோ அலர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் சாதாரண மழை பெய்யும். மழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில இடங்களில், மணிக்கு 30 முதல் 40 கி.மீ., வேகத்திலும், சில இடங்களில் 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் வாய்ப்புள்ளது.
பல இடங்களில் மழை பெய்வதால், அதிகபட்ச வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.