தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ வரதட்சணை கொடுமை நால்வருக்கு சிறை

வரதட்சணை கொடுமை நால்வருக்கு சிறை

வரதட்சணை கொடுமை நால்வருக்கு சிறை


ADDED : ஜூலை 29, 2024 06:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2024 06:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

யாத்கிர் : மனைவியை வரதட்சணை கொடுமைப்படுத்திய கணவர் உட்பட நால்வருக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

யாத்கிர் சஹாபுராவில் வசிப்பவர் லட்சுமிகாந்த், 30. இவரது மனைவி மஞ்சுளா, 26. லட்சுமிகாந்த், மனைவியிடம் வரதட்சணை வாங்கி வரும்படி கொடுமைப்படுத்தினர். இதற்கு அவரது குடும்பத்தினரும் உடந்தையாக இருந்தனர்.

கடந்த 2022ன், அக்டோபர் 31ல் மனைவியை தாக்கி இம்சித்துள்ளார். இது தொடர்பாக, மஞ்சுளாவின் பெற்றோர், சஹாபுரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் விசாரணையை துவக்கினர்.

லட்சுமிகாந்த், அவரது குடும்பத்தை சேர்ந்த மானப்பா, பூதேவி, மாலா ஆகியோரை, யாத்கிர் ஜெ.எம்.எப்.சி., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, குற்றபத்திரிகை தாக்கல் செய்தனர்.

விசாரணையில் குற்றம் உறுதியானதால், நால்வருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை, 20,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஷோபா, நேற்று முன் தினம் தீர்ப்பளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us