உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மே 25, 2024 05:55 AM
அ நிறம் | அளவு
ஹாவேரி : திருப்பதிக்குச் சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது. இதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர்.
ஹாவேரியின் அஸ்வினி நகரை சேர்ந்த குடும்பத்தினர், நேற்று முன் தினம் இரவு, திருப்பதிக்கு காரில் புறப்பட்டனர். நள்ளிரவு 12:30 மணியளவில், ராணி பென்னுாரின் தேசிய நெடுஞ்சாலை - 4ல் சென்றபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பல்டியடித்து நெடுஞ்சாலையில் இருந்து, சர்வீஸ் சாலையில் விழுந்தது.
இதில் காரில் பயணம் செய்த சுரேஷ், 45, ஐஸ்வர்யா, 22, சேத்தனா, 7, ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். பிரமிளா, 28, மருத்துவமனையில் உயிரிழந்தார். ஆறு பேர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
ராணி பென்னுார் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.
