திருவனந்தபுரம் அருகே ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பலி
திருவனந்தபுரம் அருகே ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பலி
ADDED : ஆக 06, 2024 02:58 AM
திருவனந்தபுரம்:கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற தந்தை, மகன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
திருவனந்தபுரம் அருகே ஆரிய நாட்டைச் சேர்ந்தவர் அனில் குமார் 50. கேரள போலீஸ் ஐ.ஜி. வாகன டிரைவர். மனைவி சரிதா.
இவர்களது மகன்கள் அமல் 13 அகில் 11. நேற்று முன்தினம் அனில் குமாரின் வீட்டுக்கு சகோதரர் சுனில் குமார், சகோதரி ஸ்ரீபிரியா ஆகியோர் குடும்பத்தினருடன் வந்துள்ளனர்.
மதியம் அனைவரும் வீட்டில் சாப்பிட்டுவிட்டு மூணாட்டுமுக்கில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றனர்.
அங்கு சிறிது நேரம் இருந்த பின்னர் கரமனை ஆற்றில் குளித்தனர். அப்போது ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில் அனில் குமாரின் சகோதரி ஸ்ரீ பிரியாவின் மகன் ஆனந்த் 25, தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.
இதை பார்த்த மற்றவர்கள் அவரைக் காப்பாற்ற முயன்ற போது அவர்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
அனில் குமாரின் மற்றொரு மகன் அகில், சுனில் குமாரின் மகன் அனந்தராமன் ஆகியோர் ஆற்றில் நீச்சல் அடித்து வெளியே வந்தனர்.
ஆனால் அனில் குமார், அவரது மகன் அமல், ஸ்ரீபிரியாவின் மகன் ஆனந்த், சுனில் குமாரின் மகன் அத்வைத் 27, ஆகிய நான்கு பேரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.
நான்கு பேரின் உடலும் மீட்கப்பட்டது. மழையால் பேப்பரை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் கரமனை ஆற்றில் திடீரென வெள்ளம் அதிகரித்து இந்த விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
திருவனந்தபுரம் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் நேற்று அவரது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.