தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ கள்ளத்தொடர்பை அம்பலப்படுத்தியவர் கொலை மண்டை ஓடு மூலம் அடையாளம் கண்டுபிடிப்பு

கள்ளத்தொடர்பை அம்பலப்படுத்தியவர் கொலை மண்டை ஓடு மூலம் அடையாளம் கண்டுபிடிப்பு

கள்ளத்தொடர்பை அம்பலப்படுத்தியவர் கொலை மண்டை ஓடு மூலம் அடையாளம் கண்டுபிடிப்பு


ADDED : ஜூன் 15, 2024 04:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2024 04:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விஜயபுரா: விஜயபுரா தாளிகோட்டின் நீரலகி கிராமத்தில் வசித்தவர் தாவலசாப் முஜாவர், 22. இவர் 2023 நவம்பர் 8ல் வீட்டில் இருந்து வெளியே சென்றார். மீண்டும் வீடு திரும்பவில்லை. முஹாவர், அவ்வப்போது மஹாராஷ்டிராவுக்கு, பணிக்கு செல்வது வழக்கம். அங்கு சென்றிருப்பார் என, குடும்பத்தினர் நினைத்தனர். ஆனால் பல நாட்களாகியும், வீட்டுக்கு வராததால் நடப்பாண்டு ஜனவரி 25ல், கலகேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசாரும், பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் ஜூன் 2ல், நீரலகி கிராமத்தில், மத்னுார் என்பவரின் நிலத்தில், ஒரு நபரின் மண்டை ஓடும், எலும்புகளும் கிடந்தன. போலீசாருக்கு, அவர் தகவல் கொடுத்தார். அங்கு வந்த போலீசார், மண்டை ஓடு, எலும்புகளை மீட்டனர். இவற்றை ஆய்வகத்துக்கு அனுப்பினர். இவைகள், காணாமல் போன தாவலசாப் முஜாவருடையது என்பது தெரியவந்தது.

விசாரணையை தீவிரப்படுத்தினர். முஜாவரை கொலை செய்த தனீப் பகவானை கைது செய்தனர்.

விசாரணையில் கிடைத்த தகவல்கள்:

தாவலசாப் முஜாவருக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன், சபியா என்பவருடன் திருமணம் நடந்தது. தம்பதி இடையே அடிக்கடி சண்டை வந்தது. தன் சகோதரி மகளான சபியாவை சரியாக பார்த்து கொள்ளவில்லை என, அவரது உறவினர் அல்லிசாப், முஜாவரை திட்டினார்.

திருமணத்துக்கு முன், முஜாவருக்கும் அல்லிசாபின் மருமகள் தஸ்லீமுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. சபியாவுடன் திருமணமான பின், கள்ளத்தொடர்பை அவர் துண்டித்து கொண்டார்.

கள்ளத்தொடர்பு


அதன்பின் தஸ்லீம், அதே கிராமத்தின் தனீப் பகவானுடன் கள்ளத்தொடர்பு வைத்து கொண்டார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்த முஜாவர், இவ்விஷயத்தை ஊராரிடம் அம்பலப்படுத்தினார். இதனால் இவர் மீது, தனீப் பகவான், தஸ்லீம் குடும்பத்தினர் கோபம் அடைந்தனர்.

இதே கோபத்தால், தனீப் பகவான், அல்லிசாப், அஸ்மீர், முஜாவர், சமீர் சவுதாகர் ஆகியோர், முஜாவரை ஆயுதங்களால் தாக்கி, கொலை செய்து நிலத்தில் புதைத்தது, விசாரணையில் தெரிந்தது. கொலை தொடர்பாக, ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us