ADDED : ஆக 10, 2024 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல்: தங்கவயல் மாவட்ட போலீஸ் மற்றும் பெங்களூரு பன்னரகட்டாவில் உள்ள போர்ட்டீஸ் மருத்துவமனை இணைந்து நேற்று இலவச மருத்துவ முகாம் நடத்தின.
சாம்பியன் ரீப் பகுதியில் உள்ள டி.ஏ.ஆர்., எனும் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் நிலைய வளாகத்தில், மருத்துவ முகாமை இன்ஸ்பெக்டர் சுனில் குமார் துவக்கி வைத்தார்.
தங்கவயல் போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இந்த இலவச மருத்துவ முகாமில் பங்கேற்றனர். போர்ட்டீஸ் மருத்துவமனை டாக்டர்கள் நவீன் திலீப், வெங்கடேஷ் ரெட்டி, பிரவீன் குமார் உட்பட மருத்துவ குழுவினர், 112 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி, சிகிச்சை அளித்தனர்.