sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கடனை அடைக்க கொள்ளை நாடகம் வசமாக மாட்டிக்கொண்ட தோழிகள்

/

கடனை அடைக்க கொள்ளை நாடகம் வசமாக மாட்டிக்கொண்ட தோழிகள்

கடனை அடைக்க கொள்ளை நாடகம் வசமாக மாட்டிக்கொண்ட தோழிகள்

கடனை அடைக்க கொள்ளை நாடகம் வசமாக மாட்டிக்கொண்ட தோழிகள்


ADDED : மே 28, 2024 06:14 AM

Google News

ADDED : மே 28, 2024 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராய்ச்சூர்: கடனை அடைக்க தோழிக்கு உதவ, கொள்ளை நாடகம் நடத்திய பெண்ணும், அவரது தோழியும் கைது செய்யப்பட்டனர்.

ராய்ச்சூரின் மன்சலாபுரா கிராமத்தில் வசிக்கும் தோழிகள் ராஜேஸ்வரி, 48, ரேணுகா, 45. ராஜேஸ்வரியின் மகன், ஏட்டு பணிக்காக தேர்வு எழுதி உள்ளார். ஆனால் மகன் எஸ்.ஐ.,யாக வேண்டும் என்பது, தாயின் கனவாகும்.

தோழிகள் அலறல்


கனவு நனவாக வேண்டி பிரார்த்தனை செய்யும் நோக்கில், தோழிகள் இருவரும் மே 24ம் தேதி கிராமத்தின் புறநகரில் உள்ள பூந்தோட்ட ஆஞ்சநேயா சுவாமி கோவிலுக்கு சென்றனர். கோவிலில் நுழையும் முன், இருவரும் கழிப்பறைக்கு சென்றனர்.

சிறிது நேரத்தில் அலறியபடி ஓடி வந்தனர். அப்பகுதியினர் என்ன நடந்தது என, விசாரித்த போது ராஜேஸ்வரி, 'பைக்கில் வந்த இரண்டு முகமுடி கொள்ளையர்கள், கத்தியை காண்பித்து மிரட்டி, என் கம்மல், தங்கச்செயின், பிரேஸ்லெட் உட்பட, 100 கிராம் எடையுள்ள தங்க நகைகள், ரேணுகாவின் கம்மலை பறித்து கொண்டு தப்பியோடினர்' என்றார்.

இது குறித்து, ராய்ச்சூர் ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

அப்பகுதியினரிடம் தகவல் சேகரித்தனர். கொள்ளை நடந்ததற்கான அறிகுறிகளே இல்லை. எனவே சந்தேகமடைந்த போலீசார், ராஜேஸ்வரியையும், ரேணுகாவையும் விசாரித்த போது, 'கொள்ளை நாடகம்' ஆடியது தெரிந்தது.

ரூ.10 லட்சம் கடன்


தன் தோழி ராஜேஸ்வரியின் கணவரிடம், ரேணுகா 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். மாதந்தோறும் 20,000 ரூபாய் வட்டி கட்ட வேண்டியிருந்தது. சில மாதங்கள் வட்டியை சரியாக கட்டினார்.

ஆனால் சமீப நாட்களாக, அவரால் வட்டி கட்ட முடியவில்லை. இதனால், தன் வீட்டை விற்று, கடனை அடைப்பதாக ராஜேஸ்வரியிடம் கூறினார். இதனால் மனம் வருந்திய ராஜேஸ்வரி, வீட்டை விற்க வேண்டாம் என்றார். தோழியின் கஷ்டத்தை போக்க கொள்ளை நாடகம் பற்றி கூறினார்.

சம்பவ நாளன்று ராஜேஸ்வரியும், ரேணுகாவும் கோவிலுக்கு வந்தனர். கழிப்பறைக்கு செல்லும் இடத்துக்கு, ராஜேஸ்வரி தன் மகனை வரவழைத்தார்.

இவரிடம் தங்க நகைகளை கழற்றி கொடுத்து அனுப்பினர். பின் மர்மநபர்கள் கொள்ளை அடித்ததாக நாடகமாடியதை ஒப்புக்கொண்டனர்.

தங்க நகைகளை விற்று, அந்த பணத்தை ராஜேஸ்வரியின் கணவரிடம் கொடுத்து, ரேணுகாவின் கடனை அடைப்பது, இவர்களின் திட்டமாகும். இருவரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us