ADDED : ஆக 06, 2024 01:26 AM
2024, ஜூன் 5 வங்கதேச சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 30 ச--தவீத இடஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் மீண்டும் அமல்படுத்தியது.
ஜூன் 7மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
ஜூலை 1போராட்டத்தால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து முடங்கியது.
ஜூலை 15போராட்ட மாணவர்களை தேச துரோகிகள் என்றார் ஹசீனா. போராட்டம் தீவிரம் அடைந்தது. டாக்கா பல்கலை மாணவர்கள் ஆளுங்கட்சியினரால் தாக்கப்பட்டனர்; 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஜூலை 16ஆறு மாணவர்கள் பலி.
ஜூலை 21இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உச்ச நீதிமன்றம் குறைத்தது. மாணவர்கள் ஏற்க மறுத்தனர். போராட்டம் தீவிரமடைந்தது.
ஜூலை 27போராட்டத்தில் ஈடுபட்ட நுாற்றுக்கணக்கான மாணவர்கள் கைது.
ஆக., 1ஜமாத் - இ - இஸ்லாமி கட்சியின் மாணவர் அமைப்பான ஜமாத் ஷிபிர், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டது.
ஆக., 4 போராட்டம் கலவரமாக வெடித்தது. 90க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
ஆக., 5 நெருக்கடி அதிகரித்ததும், நாட்டை விட்டு வெளியேறினார் ஹசீனா.