ADDED : செப் 06, 2024 06:08 AM

பெங்களூரு: கர்நாடகாவில் பண்டிகை நாட்கள், சுப தினங்களின் போது பூ, பழம், காய்கறி விலை உயருவது சகஜம்.
நாளை கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, வழக்கம்போல விலை உயர்வு ஏற்பட்டு உள்ளது. கனகாம்பரம் பூ விலை ஒரு கிலோ 800 ரூபாயில் இருந்து 3,000 ரூபாயாகவும்; மல்லிகை 300 ரூபாயில் இருந்து 600 ரூபாயாகவும்; சுகந்தராஜா 100 ரூபாயில் இருந்து 240 ஆகவும் உயர்ந்து உள்ளது.
காய்கறிகள் விலையும் தாறுமாறாக உயர்ந்து உள்ளது. ஒரு கட்டு கொத்தமல்லி இலை 20 ரூபாயில் இருந்து 60 ரூபாயாக உயர்ந்து உள்ளது.
கீரை ஒரு கட்டு 10 ல் இருந்து 20 ரூபாயாகவும்; புதினா ஒரு கட்டு 10 ரூபாயில் இருந்து 20 - 25 ரூபாயாகவும்; பீன்ஸ் 40 ரூபாயில் இருந்து 70 ரூபாயாகவும்; பாகற்காய் 40 ரூபாயில் இருந்து 60 ரூபாயாகவும் உயர்ந்து உள்ளது.
ஒரு கிலோ 150 ரூபாய்க்கு விற்ற ஆப்பிள் தற்போது 150 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. மாதுளை 100 ரூபாயில் இருந்து 160 ரூபாயாகவும்; பட்டர் புரூட் 220 ரூபாயில் இருந்து 280 ரூபாய்; மாதுளை 135 ரூபாயில் இருந்து 220 ரூபாயாக உயர்ந்து உள்ளது.
விலை உயர்ந்தாலும் விற்பனை படுஜோராக நடந்தது.