விநாயகர் சதுர்த்தி, மிலாடி நபி ஹிந்து - முஸ்லிம்கள் கொண்டாட்டம்
விநாயகர் சதுர்த்தி, மிலாடி நபி ஹிந்து - முஸ்லிம்கள் கொண்டாட்டம்
ADDED : செப் 17, 2024 05:15 AM

மைசூரு : மைசூரு நகரில் ஹிந்து - முஸ்லிம் மக்கள் அமைதி மற்றும் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக விநாயகர் பண்டிகை, மிலாடி நபி கொண்டாடினர்.
மைசூரு நகரின் சுண்ணதகேரியில் விநாயகா இளைஞர் அணி சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. இவ்வேளையில் இரு தரப்பினரும் கலந்து கொண்டு வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.
பள்ளி மாணவ - மாணவியருக்கு புத்தகம், பேனா மற்றும் போளி வழங்கி, பண்டிகை நல்வாழ்த்துகளை, இரு மத பிரமுகர்கள் தெரிவித்து ஒற்றுமையை நிலை நாட்டினர்.
காங்கிரசை சேர்ந்த ஸ்ரீநாத் பாபு கூறுகையில், ''நமது நாட்டில் ஒரே ஆண்டில் பல்வேறு பண்டிகைகள் வருகிறது. அவைகளை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
இந்த ஆண்டு விநாயகர் பண்டிகை முடிந்த, பத்து நாட்களில் மிலாடி நபி வந்துள்ளது. ஒற்றுமையை நிலை நாட்டுவதற்காக ஒன்றாக சேர்ந்து பண்டிகையை கொண்டாடி வருகிறோம்,'' என்றார்.
மைசூரு நஜர்பாத்கை சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் நடராஜு, விநாயகர் இளைஞர் அணி தலைவர் மஞ்சுநாத், கிஷோர் குமார், ராகவேந்திரா, சித்தராஜு, சித்தராமையா பிரிகேட் தலைவர் இன்கல் உதய் சக்கரபாணி, சாமுண்டீஸ்வரி தொகுதி மைனாரிட்டி தலைவர் ஹரிஷ், குல்ஜான் பாஷா உட்பட பலர் பங்கேற்றனர்.
போலீஸ் பாதுகாப்பு
மைசூரு நகரம் உட்பட மாவட்டம் முழுதும் முஸ்லிம்கள், நேற்று மிலாடி நபியை கொண்டாடினர். மைசூரு நகர மைதானங்களில் சமூக கூட்டுப் பிரார்த்தனை செய்தனர்.
தமது பிள்ளைகளுடன் புது வெள்ளை ஆடைகள் அணிந்து, தனி வாகனங்களில் பண்டிகை சின்னமான கொடிகளை பிடித்து சென்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமையுடன் இணைந்து விநாயகர் சதுர்த்தி, மிலாடி நபி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். இடம்: மைசூரு.