ADDED : ஜூன் 20, 2024 09:58 PM
நங்லோய்: மொபைல்போன் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த மூவரை போலீசார் கைது செய்தனர்.
அலிகாரைச் சேர்ந்த நரேந்தர், கடந்த 16ம் தேதி மஹாராஜா சூரஜ்மல் ஸ்டேடியத்தில் இருந்து நங்லோய் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, அவரது மொபைல் போனைப் பறித்துக்கொண்டு ஸ்கூட்டரில் இரண்டு பேர் தப்பிச் சென்றதாக நங்லோய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
ராவ் விஹார், நங்லோய் பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டு, அபய், 22, அங்கித், 32, ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
இருவரும் கொடுத்த தகவலின்பேரில், திருட்டு மொபைல் போன்களை வாங்கிய சுல்தான்புரி பகுதியைச் சேர்ந்த ராகுல் ஜாங்ரா என்பவரை போலீசார் பிடித்தனர்.
இந்த கும்பலிடம் இருந்து 75 திருடப்பட்ட மொபைல் போன்களை மீட்டனர். இவர்களுக்கு 23 வழிப்பறி வழக்குகளில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.