ADDED : மே 13, 2024 06:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பீதர்: அவுராத் வழியாக மஹாராஷ்டிராவுக்கு, கடத்தி செல்லப்பட்ட 15 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஒடிஷாவில் இருந்து, மஹாராஷ்டிராவுக்கு பீதரின், அவுராத் வழியாக பெருமளவில் கஞ்சா கடத்தப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பெங்களூரின் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள், போலீசார் நேற்று மாலை பீதருக்கு சென்றனர். அவுராதின், வனமாரபள்ளி அருகில் வாகனங்களை சோதனையிட்டனர். ஒரு லாரியை மடக்கி சோதனையிட்ட போது, கஞ்சா மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
15 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1,500 கிலோ கஞ்சாவை லாரியுடன் பறிமுதல் செய்தனர். அதில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.