5வது மாடியில் இருந்து விழுந்த நாய்; தலையில் விழுந்ததில் சிறுமி உயிரிழப்பு!
5வது மாடியில் இருந்து விழுந்த நாய்; தலையில் விழுந்ததில் சிறுமி உயிரிழப்பு!
ADDED : ஆக 08, 2024 07:54 AM

மும்பை: மும்பையில் 5வது மாடியில் இருந்து கீழே விழுந்த நாய், சாலையில் நடந்து சென்ற சிறுமி தலையில் விழுந்தது. இதில், சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
மஹாராஷ்டிரா, மும்பையில் உள்ள மும்ப்ரா பகுதியில் சாலையில் தாயுடன் 3 வயது சிறுமி சென்று கொண்டிருந்தார். அப்போது 5வது மாடியில் இருந்து, சிறுமியின் தலையில், திடீரென நாய் ஒன்று விழுந்தது. இதில் 3 வயது சிறுமி மயக்கம் அடைந்தார். தாய், கதறியபடி சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி இறந்து விட்டதாக கூறியதும், தாய் அதிர்ந்து போனார். சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் கதறியது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
விசாரணை
இதற்கிடையே சிறுமி மீது விழுந்த நாய், அருகே இருந்த கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறுமியின் தலையில் நாய் விழும் போது, அருகில் இருந்து சி.சி.டி.வி கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. நாய் தவறுதலாக விழுந்ததா, அல்லது வேண்டுமென்றே தூக்கி எறியப்பட்டதா, என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.