ADDED : ஜூலை 07, 2024 03:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
யாத்கிர்: இரண்டு மாத பெண் குழந்தை, கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்டது.
யாத்கிர் நகரின், அம்பேத்கர் லே -- அவுட்டில் வசிப்பவர் நாகேஷ், 30. இவரது மனைவி செட்டம்மா, 27. தம்பதிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, பெண் குழந்தை பிறந்தது. நேற்று முன் தினம் குழந்தை காணாமல் போனதாக கூறப்பட்டது.
இதற்கிடையில், அம்பேத்கர் லே - அவுட் புறநகரில், ஆள் நடமாட்டமில்லா பகுதியில் இருந்த கிணற்றில், நேற்று குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. பெண் குழந்தை என்பதால் பெற்றோரே, கிணற்றில் வீசி கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தகவலறிந்து அங்கு வந்த, யாத்கிர் நகர் போலீசார், குழந்தையின் உடலை மீட்டனர். நாகேஷ் குடும்பத்தினரிடம் விசாரிக்கின்றனர்.