நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரன்ஹோலா: டில்லியின் புறநகரான ரன்ஹோலாவில் பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
ரன்ஹோலா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 30 வயது பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் இறந்து கிடந்தார். அவருடன் தங்கியிருந்த நபர் மாயமாகி இருந்தார்.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இருவருக்குமான உறவு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த பெண் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
தமக்கு அழைப்பு வந்ததாகவும், ஒரு குழுவினர் வீட்டில் இருந்து அவரது உடலை மீட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.