ADDED : மே 20, 2024 09:11 PM
ஹெப்பால்: சாக்லேட் வாங்கி தருவதாக கூறி, 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்த செக்யூரிட்டி கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு, ஹெப்பாலில் அடுக்குமாடி குடியிருப்பில், நேபாளத்தைச் சேர்ந்த தம்பதி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 10 வயதில் மகள் உள்ளார். இதன் அருகில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பில் செக்யூரிட்டியாக இருப்பவர் பீஹாரை சேர்ந்த ராஜேஷ் குப்தா, 55.
கடந்த 18ம் தேதி அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே, சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த செக்யூரிட்டி ராஜேஷ் குப்தா, சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி, சிறுமியை, கழிப்பறைக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார்.
இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி உள்ளார்.
அன்று எதுவும் கூறாமல் இருந்த சிறுமி, மறுநாள் பெற்றோரிடம் விஷயத்தை கூறினார். அதிர்ச்சியடைந்த அவர்கள், ஹெப்பால் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். செக்யூரிட்டி மீது 'போக்சோ' வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ராஜேஷ் குப்தா நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். போலீசார், அவரிடம் விசாரிக்கின்றனர்.
