3.50 லட்சம் செடிகள் வளர்த்து பராமரிப்பு வனப்பகுதியை மேம்படுத்த அரசு திட்டம்
3.50 லட்சம் செடிகள் வளர்த்து பராமரிப்பு வனப்பகுதியை மேம்படுத்த அரசு திட்டம்
ADDED : மார் 07, 2025 11:04 PM

வேளாண்- வனவியல் நடவடிக்கைகளை ஊக்குவிக்க, அதிக, 'கார்பன்' தக்கவைக்கும் திறன் கொண்ட தாவர இனங்களை வளர்க்க, 'வேளாண்- வனவியல் மற்றும் கார்பன் கடன்' கொள்கையை செயல்படுத்தி, விவசாயிகளின் நிதி நிலையை வலுப்படுத்த நடவடிக்கை
பசுமையை மேம்படுத்த, 70,410 ஏக்கர் வனப்பகுதியில், 2.13 கோடி செடிகளும்; 2,965 ஏக்கர் வனமற்ற பகுதியில், 3.50 லட்சம் செடிகளும் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்படும்
காலநிலை மாற்றத்தின் விளைவுகளை தணிக்க, சுற்றுச்சூழல் உணர்வுள்ள நிறுவனங்கள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளுடன் இணைந்து கே.எப்.டபிள்யூ.சி.சி.எம்.எப்., எனும் கர்நாடகா வனம், வனவிலங்கு மற்றும் காலநிலை மாற்ற தணிப்பு அறக்கட்டளை அமைக்கப்படும். சி.எஸ்.ஆர்., எனும் பெருநிறுவன சமூகப் பொறுப்பு மற்றும் நன்கொடை மூலம், சுற்றுச்சூழல் மேம்படுத்தப்படும்
பருவநிலை மாற்ற அபாயங்களை குறைக்க நிலையான வளர்ச்சிக்கு, நடப்பாண்டு 'கர்நாடக மாநில ஒருங்கிணைந்த பருவநிலை மாற்ற செயல் திட்டம்' வகுக்கப்படும்
வன விலங்குகளின் தாக்குதலால் ஏற்படும் மனித உயிரிழப்புகளுக்கான நிவாரணம், 15 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்
விவசாய நிலங்களில் தேக்கு மற்றும் பிற மதிப்புமிக்க மரங்களை வளர்ப்பதை ஊக்குவிக்க, தற்போதுள்ள விதிமுறைகள் எளிமையாக்கப்படும்
மாநிலத்தில் காட்டு யானை மற்றும் சிறுத்தை அச்சுறுத்தலை கட்டுப்படுத்த, எட்டு யானைகள் பணிக்குழு, இரண்டு சிறுத்தை பணிக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்காக, நடப்பாண்டில், 17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
மனித-ன் - யானை மோதலை தடுக்க, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 150 கி.மீ., நீளமுள்ள ரயில் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக, 2025--26ல், 60 கோடி ரூபாய் ஒதுக்கீடு
கர்நாடகாவில் மனித - -யானை மோதலை திறம்பட நிவர்த்தி செய்வதற்காக, பத்ரா புலிகள் காப்பகத்திற்குள் 20 சதுர கி.மீ பரப்பளவில் 'காட்டு- யானையை சாந்தப்படுத்தும் மையம்' நிறுவ 20 கோடி ரூபாய் மானியம் வழங்கல்
பெங்களூரில் உள்ள 3,000 எஸ்.டி.பி., எனும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடுகள், தொழில்நுட்பம் மூலம் கண்காணித்து, தினமும் பொதுமக்களுக்கு தரவுகள் கிடைக்க நடவடிக்கை
மஹாத்மா காந்தி தேசிய கிராம வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துடன் இணைந்து, வன புல்வெளிகளில் லந்தானா மற்றும் யூபடோரியம் களைகள் அகற்றப்படும். இதனால் வன விலங்குகளுக்கான தீவனம் எளிதில் கிடைக்கும்.