ADDED : ஜூலை 11, 2024 10:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்ரம் நகர்:அரசு மருத்துவர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்வதற்கு ஒரு குழுவை அமைத்து, டில்லி அரசின் சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை கருத்தில் கொண்டு, அரசு மருத்துவர்கள் ஓய்வு பெறும் வயதை 65ல் இருந்து 70 ஆக உயர்த்துவது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் தலைமையிலான குழுவில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலச் செயலர், சுகாதாரப் பணிகள் இயக்குநரகத்தின் இயக்குநர், மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி டீன் மற்றும் லோக் நாயக் மருத்துவமனையின் எம்.டி., உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழு அமைக்கும் முடிவிற்கு துணைநிலை கவர்னரின் முன் அனுமதி பெறப்பட்டுள்ளது.