ADDED : மே 09, 2024 05:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார் தங்க கோவிலில் நடந்த நிகழ்ச்சியில், கர்நாடகா, அசாம் மாநில கவர்னர்கள் பங்கேற்றனர்.
தமிழகம் வேலுாரில் உள்ள தங்க கோவிலின், நாராயண பீடத்தின் 32வது ஆண்டு விழா, நேற்று கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், அசாம் கவர்னர் குலாப் சந்த் கட்டாரியா கலந்து கொண்டனர். இருவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில், பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
அங்கு நடந்த நிகழ்ச்சியில், தாவர்சந்த் கெலாட் பேசுகையில், ஆன்மிக பாரம்பரியத்தின் மீதான ஆழ்ந்த மரியாதையை வெளிப்படுத்தினார். பல்வேறு சமூகங்கள் இடையில், அமைதி மற்றும் புரிதலை வளர்ப்பதன் முக்கியத்துவம் பற்றியும் பேசினார். தங்க கோவிலின் சமூக நலன் சார்ந்த முயற்சிகள், ஆன்மிகம் பற்றி குலாப் சந்த் கட்டாரியா பேசினார்.
- நமது நிருபர் -