வீடுகளில் மீதமாகும் உணவு பெறும் கிராம பாரதி டிரஸ்ட்
வீடுகளில் மீதமாகும் உணவு பெறும் கிராம பாரதி டிரஸ்ட்
ADDED : மே 10, 2024 10:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முல்பாகல்: வீடுகளில் மீதமாகும் உணவைப் பெற கிராம பாரதி டிரஸ்ட் முன்வந்துள்ளது.
கிராம பாரதி டிரஸ்ட் அமைப்பின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி நேற்று அளித்த பேட்டி:
முல்பாகலில் உள்ள திருமண மண்டபங்கள், நகர, கிராம திருவிழாக்களில் தயாரிக்கும் உணவு விருந்தில், மீதமாகும் உணவை வீணாக்குவதைத் தவிர்த்து, எங்களின் 'கிராம பாரதி டிரஸ்ட்' அமைப்பு பெற்று, ஆதரவற்றோருக்கு வழங்கி வருகிறது.
தினமும் உணவு தேவைப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால், இனிமேல் வீடுகளில் மீதமாகும் உணவையும் பெற முன்வந்துள்ளோம். எனவே மீதமாகும் உணவை வீணாக்காமல் உணவு வங்கியில் வழங்குமாறு கோருகிறோம். இவ்விஷயத்தில் சமுதாய மக்களின் உதவியையும் பெரிதாக எதிர்ப்பார்க்கிறோம். தானத்தில் சிறந்தது அன்னதானம். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.