ADDED : ஜூலை 08, 2024 12:07 AM

சூரத் : குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி கிராமத்தில் ஆறு மாடி கட்டடம், கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையில் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது.
இதில் ஒரு பெண் மீட்கப்பட்ட நிலையில், 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
மேலும், ஏழு பேர் வரை இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் கட்டட இடிபாடுகளை அகற்றி ஏழு பேரின் சடலங்களை மீட்டனர்.
இது தொடர்பாக, மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறை தலைமை அதிகாரி பசந்த் பிரேக் கூறுகையில், “கட்டட இடிபாடுகளுக்குள் வேறு யாரும் இல்லை. இதனால் மீட்புப் பணி முடிவுக்கு வந்துள்ளது.
''சட்டவிரோதமாக இந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஐந்து பிளாட்களில் மட்டும் மக்கள் வசித்து வந்தனர்,” என்றார்.