ஒற்றுமை சிலையை பார்க்க விரைவாக செல்ல குஜராத் அரசு ரூ.381 கோடி ஒதுக்கீடு
ஒற்றுமை சிலையை பார்க்க விரைவாக செல்ல குஜராத் அரசு ரூ.381 கோடி ஒதுக்கீடு
UPDATED : ஆக 18, 2024 09:01 PM
ADDED : ஆக 18, 2024 08:55 PM

ஆமதாபாத்: ஒற்றுமை சிலையை பார்க்க விரைவாக செல்லும் வகையில் சாலை மேம்பாட்டு பணிக்காக குஜராத்  முதல்வர்  ரூ.381 கோடி ஒதுக்கி உள்ளார்.
பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் படி , இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 'ஒற்றுமை சிலை' சர்தார் சரோவர் நர்மதா பந்த்-ஏக்தா நகர் பகுதியில உலகின் மிக உயரமான சிலை கட்டப்பட்டது.
இதனையடுத்து உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகிறார்கள்.  இந்நிலையில் ஏக்தா நகருடன் வதோதராவை இணைக்கும் சாலையை  மேம்படுத்த குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ரூ.381.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
இதன்படி  வதோதரா தேசிய நெடுஞ்சாலை 48 சந்திப்பிலிருந்து வுடா ஹட் வரை ஆறு வழிச் சாலையும், இருபுறமும் சர்வீஸ் சாலையும், வுடா ஹாட் முதல் டாபோய் வரை மீதமுள்ள 2.5 கி.மீ. அதிவேக நடைபாதையின் கட்டம்-1க்கு. நீளம் முழுவதும் நிலையான நான்கு வழி வழித்தடங்கள் மேற்கொள்ளப்படும்.
மேலும் ரத்தன்பூர் சௌக் மற்றும் துவாவி சந்திப்பு வழியாக 6 வழி வாகன சுரங்கப்பாதை அமைப்பதுடன், கெல்லன்பூர் கிராமம் மற்றும் சினோர் சௌக் மீது 4 வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட உள்ளது.

