அங்காள பரமேஸ்வரி கோவிலில் மே 1ல் குரு பெயர்ச்சி ஹோமம்
அங்காள பரமேஸ்வரி கோவிலில் மே 1ல் குரு பெயர்ச்சி ஹோமம்
ADDED : ஏப் 27, 2024 11:20 PM

சிவாஜி நகர்: சிவாஜி நகர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மே 1ம் தேதி குரு பெயர்ச்சி ஹோமம் நடத்தப்படுகிறது.
மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு மே 1ம் தேதி மாலை 5:21 மணிக்கு குரு பகவான் பிரவேசிக்கிறார். இதனால், மேஷம் ராசிக்காரர்களுக்கு தொழில் வளர்ச்சி, வசதி வாய்ப்பு, திருமணம், இடம் மாற்றம், நோய் தீரும்; ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சுப செலவு, ஊதிய உயர்வு, தன்னம்பிக்கை, வெளிநாட்டு பயணம்;
மிதுனம் ராசிக்காரர்களுக்கு குழப்பம், வேலைப்பளு, ஆரோக்கிய தொல்லை, இடம் மாற்றம், வீடு, வாகன மாற்றம்; கடகம் ராசிக்காரர்களுக்கு அரசியல் ஈடுபாடு, ஆடம்பர செலவு, லாபம், புதிய பதவி, தம்பதியர் அந்நியோன்யம்; சிம்மம் ராசிக்காரர்களுக்கு கடன் சுமை குறையும், பதவி மாறுதல், வாகன மாற்றம், ஆடம்பர செலவு, பகை;
கன்னி ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் பொன், மகிழ்ச்சி, பொன் பொருள் சேரும், திருமணம், அதிர்ஷ்டம்;
துலாம் ராசிக்காரர்களுக்கு பணப் பற்றாக்குறை, அதிருப்தி, நஷ்டம், தொழில் முடக்கம், ஆன்மிக பயணம்;
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம், செல்வாக்கு கூடும், புகழ், திருமணம், தொழில் வளர்ச்சி, அதிர்ஷ்டம்; தனுசு ராசிக்காரர்களுக்கு பொருளாதாரம் சீராகும், சுபகாரியம், கடன் குறையும், புதிய நட்பு; மகரம் ராசிக்காரர்களுக்கு வசதி வாய்ப்புகள் பெருகும், புகழ் பாராட்டு, உற்சாகம், புனித பயணம்; கும்பம் ராசிக்காரர்களுக்கு மனக்குழப்பம், ஆரோக்கிய தொல்லை, பண செலவு கூடும், நில பிரச்னை; மீனம் ராசிக்காரர்களுக்கு திருமண வாய்ப்பு, வழக்கு சாதகம், மருத்துவ செலவு, காரிய தடை, தொழில் வளர்ச்சி ஏற்படும்.
இதை முன்னிட்டு, பெங்களூரு சிவாஜி நகர் ஸ்ரீராமுலா சன்னிதி தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் மே 1ம் தேதி 'குரு பெயர்ச்சி ஹோமம்' நடத்தப்படுகிறது. ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் சாந்தி பூஜை நடத்தப்படுகிறது.
அன்று மாலை 3:00 மணி முதல் சங்கல்பம், கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைக்கு பின் பிரசாதம் வழங்கப்படுகிறது.
குரு பெயர்ச்சி பூஜையில் பக்தர்கள் பங்கேற்குமாறு, ஆலய பூஜாரி எஸ்.எம்.வேலு மற்றும் டிரஸ்டிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

