ADDED : மே 03, 2024 01:59 AM
குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு கடந்த 1ம் தேதி பிரவேசித்தார். இதையொட்டி, நொய்டாவின் செக்டார் 62ல் உள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில் நவக்கிரக ஹோமத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கலச ஸ்தாபனம், ஜபம், நவக்கிரக ஹோமம் ஆகியவற்றுடன் பூஜை தொடங்கியது. இதையொட்டி, குருவுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மகா தீபாராதனையுடன் நிறைவடைந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
வி.பி.எஸ்., ஆஸ்தான வாத்தியார் ஸ்ரீசங்கர் வழிகாட்டுதலில், ஐந்து பண்டிதர்கள் குழுவினர் ஹோமத்தையும் அபிஷேகத்தையும் செய்தனர்.
இதேபோல் புதுடில்லி, துவாரகா ஸ்ரீராம் மந்திர் மற்றும் சாலிமார் பாக் ஸ்ரீ மீனாக்ஷி மந்திரில் குருப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடந்தது.
நவக்கிரஹ ஹோமம், அபிஷேகம், சிறப்பு அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான் அருள்பாலித்தார். பக்தர்கள் இதில் திரளாக கலந்து கொண்டனர்.
- நமது நிருபர் -