ADDED : ஜூலை 30, 2024 07:28 AM
சாம்ராஜ்நகர்: நோயாளியை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ், வழியிலேயே பழுதடைந்ததால் நோயாளி அவதிப்பட்டார்.
சாம்ராஜ்நகர், குண்டுலுபேட்டின், குந்தகெரே கிராமத்தில் வசிப்பவர் ஈரய்யா, 45. இவர் கடுமையான காய்ச்சல், வயிற்று வலியால் அவதிப்பட்டார். வலி அதிகரித்ததால், குடும்பத்தினர் நேற்று காலை, ஆம்புலன்ஸ் வரவழைத்தனர். இதில் ஈரய்யாவை அழைத்துக் கொண்டு, மருத்துவமனைக்கு புறப்பட்டனர்.
சிறிது தொலைவு சென்றதும் ஆம்புலன்ஸ் பழுதடைந்தது. டிரைவர் எவ்வளவு முயற்சித்தும், 'ஸ்டார்ட்' ஆகவில்லை. எனவே ஆட்டோவில் அமர்த்தி அழைத்துச் சென்றனர். பாதி வழியில் மற்றொரு ஆம்புலன்ஸ் வந்தது. இதில், ஈரண்ணாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
வலியால் அவதிப்படும் நோயாளியை, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ்களை, நல்ல நிலையில் வைத்திராததே, இதற்கு காரணம் என, கிராமத்தினர் குற்றஞ்சாட்டினர்.

