ADDED : ஏப் 09, 2024 06:33 AM
பெங்களூரு: ''யுகாதி என்பது புதுமையின் அடையாளம். பசுமையாக வளரும் நேரம். இயற்கையின் மறுமலர்ச்சியின் காலம். இந்த இனிய சந்தர்ப்பத்தில் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என, முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்தார்.
தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் தேவகவுடா வெளியிட்டுள்ள அறிக்கை:
இன்று யுகாதி புத்தாண்டில் மாநில மக்கள் கோபம், வெறுப்பு ஆகிய தீமைகளை மறந்து, மக்கள் அனைவரும் அன்புடனும், நல்லிணக்கத்துடனும், மகிழ்ச்சியுடனும், அமைதியுடனும் வாழ வேண்டும்.
கடவுள் அருளால் இந்தாண்டு மக்களின் வாழ்வு மேம்படும். வேப்பம்பூவின் கசப்பு குறையவும், வெல்லத்தின் இனிமை அதிகரிக்க வேண்டும்.
பசுமையாக வளரும் நேரம். இயற்கையின் மறுமலர்ச்சியின் காலம். இந்த இனிய சந்தர்ப்பத்தில் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில்குறிப்பிட்டு உள்ளார்.

