ஒப்பந்ததாரரிடம் கமிஷன் கேட்டு நச்சரிப்பு: பா.ஜ., எம்.எல்.ஏ., கைது
ஒப்பந்ததாரரிடம் கமிஷன் கேட்டு நச்சரிப்பு: பா.ஜ., எம்.எல்.ஏ., கைது
UPDATED : செப் 14, 2024 07:37 PM
ADDED : செப் 14, 2024 06:57 PM

மாண்டியா: கர்நாடகாவில் கமிஷன் கேட்டும் தராத ஒப்பந்ததாரரை ஜாதி பேரை சொல்லி திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக பா.ஜ. எம்.எல்.ஏ., உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் முனிரத்னா, இவர் முந்தைய பா.ஜ., ஆட்சியில் அமைச்சராகவும் தற்போது பா.ஜ., எம்.எல்.ஏ.,வாகவும் உள்ளார்.
இந்நிலையில் செல்வராஜூ என்ற ஒப்பந்ததாரர், பா.ஜ., எம்.எல்.ஏ., முனிரத்னம் என்பவர் பேசிய ஆடியோ குரல்பதிவை வெளியிட்டார். அதில் எம்.எல்.ஏ,, முனிரத்னா தன்னிடம் கமிஷன் கேட்டு பலமுறை நச்சரித்துள்ளார். கமிஷன் தராததால் ஜாதி பேரை சொல்லி திட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி உள்ளார்.மேலும் அந்த ஆடியோவை ஆதாரமாக வைத்து முனிரத்னா மீது ஒப்பந்ததாரர் செல்வராஜூ போலீசில் புகார் கூறியுள்ளார்.
இதையடுத்து போலீசார் பா.ஜ., எம்.எல்.ஏ., முனிரத்னா, அவரது உதவியாளர் உள்ளிட்ட 3 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் எப்.ஐ.ஆர்.,பதிவு செய்து கைது செய்து விசாரிக்கின்றனர்.
